இயக்குனர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை எடுத்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நின்று பேசியதால் தற்போது மக்கள் மத்தியில் கவனிக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வென்றும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா என்ற திரைப்படத்தை அஜய் ஞானமுத்து எடுத்து வருகிறார்.
இந்த படம் எடுக்கப்பட்ட நாளிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது காரணம் இதில் விக்ரம் பல கெட்டப்புகளில் போட்டு நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஆரம்பத்திலேயே படக்குழு தெளிவுபடுத்தியது இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த படம் சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக அமைந்து உள்ளதால் விக்ரம் பல கெட்டப்புகளில் போட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளார் இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு கெட்டப்பும் வேற லெவலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து ஸ்ரீநிதி ரெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர் மேலும் இர்பான் பதான், கே எஸ் ரவிகுமார், ஜான் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் தயாரிக்கிறார் இந்த படத்திற்கு பக்கபலமாக ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். தற்போது கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால் தற்பொழுது நிலவும் சூழலில் சரியில்லாததால் அந்த வேலைகளை கிடப்பில்போட்டுள்ளது படக்குழு. இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்ரம் புதிய கெட்டப் போடும் புகைப்படத்தை சமூக வளைதளபக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.