விக்ரம் படத்தின் வசூல் முடிவுக்கு வந்தது – இதுவரை மட்டும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

vikram
vikram

இளம் இயக்குனர்கள் அண்மைக்காலமாக சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் கடைசியாக வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படம் கூட இவருக்கு வெற்றி படம் தான். அதிலும் குறிப்பாக விக்ரம் திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றி ஏனென்றால் இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற முக்கிய காரணம் கமல் என கூறப்படுகிறது கடந்த பல வருடங்களாக சினிமா பக்கமே தென்படாமல் இருந்த இவருக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு சூப்பரான கதையை செதுக்கி கமலிடம் விக்ரம் படத்தின் கதையை சொன்னார் அது கமலுக்கும் ரொம்ப பிடித்து போகவே துணிந்து அந்த படத்தில் நடித்தும் தயாரிக்கவும் செய்தார்.

ஒரு வழியாக படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட வேற லெவலில் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்களும் இந்த படத்தை பார்த்து கொண்டாடினர். முதல் நாளே இந்த படம் 25 கோடிக்கு கிட்டத்தட்ட வசூல் செய்தது அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான வரவேற்பு அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.

இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, ஷிவானி நாராயணன், சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்கை தாண்டி ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அசத்திக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வசூல் முடிவுக்கு வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் நிலவரம் என்பது குறித்தும் தற்பொழுது தகவல் வந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

தமிழகத்தில் 181.80 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 42.69 கோடி, கர்நாடகா 25.40 கோடி, கேரளா 40.50 கோடி, வட இந்தியா 17.30 கோடி, இந்தியாவில் மொத்த வசூல் சுமார் 307.60 கோடி, வட அமெரிக்கா 3.35 மில்லியன் டாலர், மத்திய கிழக்கு நாடுகள் 5.20 மில்லியன் டாலர், மலேசியா 2.35 மில்லியன் டாலர், சிங்கப்பூர் 0.95 மில்லியன் டாலர், ஆஸ்திரேலியா நியூசிலாந்து 0.85 மில்லியன் டாலர், பிரிட்டன் 1.05 மில்லியன் டாலர், பிரான்ஸ் 0.50 மில்லியன் டாலர், ஐரோப்பிய நாடுகள் 1 மில்லியன் டாலர், உலகின் மற்ற நாடுகளில் 0.75 மில்லியன் டாலர், வெளிநாட்டு மொத்த வசூல் 16 மில்லியன் டாலர், ஒட்டு மொத்தமாக விக்ரம் திரைப்படம் சுமார் 432.50 கோடி வசூலித்துள்ளதாம்.