தமிழ் சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் துணிந்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டுபவர்கள் வெகு குறைவு ஆனால் அந்த லிஸ்டிலும் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விக்ரம் இவர் தனது பல்வேறு படங்களில் தனது முழு திறமையை வெளிக்காட்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
இப்பொழுது கூட அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான கோப்ரா திரைப்படத்தில் கூட நடிகர் விக்ரம் ஒன்பது விதமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார். இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா ரவி, மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ்.
மற்றும் ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், பாபு ஆண்டனி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து உள்ளனர். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தாலும் படம் நீளமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது இதை அறிந்து கொண்ட படக்குழு..
உடனடியாக படத்திலிருந்து இருபது நிமிட காட்சியை வெட்டி எடுத்துள்ளது இதனால் படத்தில் இனி போர் அடிக்காது விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கோப்ரா படத்தின் வசூல் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது தமிழ்நாட்டில் நல்ல வசூல் வேட்டை நடத்திய நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம்.
தெலுங்கிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி முதல் நாளே வசூலில் அடித்து நொறுக்கி உள்ளது அங்கு 3.5 கோடி வசூலித்துள்ளதாம். படக்குழுவே இவ்வளவு அங்கு வரும் என கணிக்கவில்லை என சொல்லப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் தமிழை தாண்டி மற்ற ஏரியாக்களில் நல்ல வசூல் வேட்டை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.