தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை முதன்முதலாக டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தொடங்கினார் அதன் பிறகு தன்னுடைய சிறந்த திறமையின் மூலம் கதாநாயகனாக தோற்றமளிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் தன்னுடைய நடிப்பு திறனை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த விக்ரம் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் அந்தத் திரைப்படத்திற்கு ஏற்றவாறு தன்னையே மாற்றிக் கொண்டு நடிப்பதில் வல்லவர்.
இந்நிலையில் அவர் டிமான்டி காலனி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு பல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் வைரஸ் தொற்று காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது மட்டுமில்லாமல் தற்போது தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எப்பொழுது அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது.
அதாவது விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படமானது 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக லலித் குமார் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.