அங்காளி பங்காளி போல் சண்டை போட்டுக் கொள்ளும் விக்ரமன் அமுதவாணன்.! இதோ இந்த வார குறும்படம்..

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து தங்களுடைய சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் 17 போட்டியாளர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கிடையே கடும் சண்டைகள் நிலவுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

எனவே சக போட்டியாளர்களை மூட்டிவிடும் வகையில் பிக்பாஸ் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கில் தினம் தோறும் சண்டை சச்சரவுகள் நடந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் குறிப்பாக அமுதவாணன் மற்றும் தனலட்சுமி இருவரும் எதிரணிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லாததை போல் கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது உள்ளே இருந்து வெளியே வரும் பொருட்களை எடுக்க இரு அணகளில் உள்ளவர்களும் தயார் நிலையில் இருக்கும் பொழுது விக்ரமன் தனது அணியை சேர்ந்தவர்களை வெளியே வாருங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஆனால் அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே நடந்த சண்டையின் போது விக்ரமன் தனது அணியை வெளியே வாருங்கள் என்று கூறவே இல்லை என அமுதவாணன் கூறுகிறார்.

இது நாள் ஒரு கட்டத்தில் சண்டை முற்றி விட இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள் இந்நிலையில் தானே குறும்படம் போட சொல்கிறேன் நீங்கள் வெளியே வர சொல்லவே இல்லை என்று அமுதவாணன் கடுமையாக கூறுகிறார்‌. ஆனால் விக்ரமன் தனது அணியினர்களை வெளியே வாருங்கள் என்று கூறினேன் என்றும் அது மக்களுக்கு தெரியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் அவர்கள் குறும்படம் போடுவதற்கு முன்பே நெட்டிசன்கள் குறும்படத்தை போட்டு அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறது. அந்த வீடியோவில் விக்ரமன் தனது அணியினரை பின்னால் வாருங்கள் இப்படி இருந்தால் எப்படி அவர்கள் செல்வார்கள் என்று கூறுகிறார் அப்பொழுது அமுதவாணனும் அருகில் தான் இருக்கின்றார் அதனை அடுத்த அமுதவாணனை இந்த வரம் கமலஹாசன் அவர்கள் கண்டிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.