சினிமா உலகில் நடிகர் விக்ரம் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்துவதால் இந்திய அளவில் கவனிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சினிமாவை பொருத்தவரை எல்லோரும் நடிக்கின்றனர் ஆனால் ஒரு சிலரே அந்த நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு நடிப்பதால் அவர்களுக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதோடு அவர்கள் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி கிடைக்கும்.
அப்படித்தான் நடிகர் விக்ரமும் அவர் நடிக்கும் திரைப்படத்திற்கு எப்போதும் மக்களின் எதிர்பார்ப்பு தாறுமாறு ஆகவே இதுவரை இருந்துள்ளது இவர் நடிப்பில் அடுத்து வரும் கோப்ரா மற்றும் சீயான் 60 ஆகிய திரைப்படங்களுக்கு தற்போது எதிர்பார்ப்புகள் அதிகமாக உருவாகியிருக்கின்றன.
ஆனால் சமீபகாலமாக விக்ரமின் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் வருகின்ற திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர் அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் மற்றும் நடிப்பு வேற லெவெலில் இருக்கும் என்பது தான். அதனால் அவரது ரசிகர்கள் எப்போதும் அவரை விட்டு நீங்காமல் நிற்கின்றனர்.
இந்நிலையில் விக்ரம் ஒரு சிறப்பான படத்தை மிஸ் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகின்றன. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், பிரபு, ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த திரைப்படம் ராவணன் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் எடுத்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் விக்ரமும், மணிரத்தினமும் முதல் முறையாக இணைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு முன்பாகவே 1995ஆம் ஆண்டிலேயே மணிரத்னமும், விக்ரமும் இணைய வேண்டியது ஆனால் அப்போது இணைய முடியாத ஒரு சூழல் நிலவியது “பாம்பே” திரைப்படத்திற்காக முதன்முதலில் மணிரத்தினம் விக்ரமை தான் தேர்வு செய்தார்.
அப்போது வேறொரு திரைப்படத்திற்காக அவர் தாடி, மீசையெல்லாம் வைத்திருந்ததால் அந்த திரைப்படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனார். அதன் பிறகு மணிரத்தினம் நடிகர் அரவிந்த் சாமியை கமிட் செய்து அந்த படத்தை எடுத்தார்.