நடிகர் சியான் விக்ரம் சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதற்கு பதிலாக வாழக்கூடியவர் அதை அவரது பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம் குறிப்பாக அந்நியன், பிதாமகன், சேது போன்ற படங்களில் விக்ரம் நடிப்பதற்கு பதிலாக வாழ்ந்து இருப்பார்.
தற்பொழுதும் கூட தனது திறமையை வெளிக்காட்டும் படி வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் விக்ரம் கையில் இப்பொழுது பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன.
அந்த வகையில் பா ரஞ்சித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து சியான் விக்ரம் நடிக்க உள்ளார் அந்த படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க 1800 களில் நடந்த ஒரு கதையை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சேது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தனது சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அபிதா இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் விக்ரம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது விக்ரம் சார் ஒரு நல்ல நடிகர் அவர் ஒரு படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கிறார்களோ அந்த கதாபாத்திரமாகவே வாழ வேண்டுமென நினைக்கக் கூடியவர்.
சேது படத்தில் நான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டேனோ அதைவிட அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். சேது படத்தில் விக்ரம் மொட்டை அடித்துக் கொண்டு ஒரு கருப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அவர் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 15 நாளைக்கு மேலாக வெயிலிலேயே அவர் உட்கார்ந்திருந்தார். மேக்கப் எதுவும் இல்லாமலேயே ரியலா அந்த லுக் வரணும்னு எதிர்பார்த்தார். அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என கூறினார்.