சியான் விக்ரம் தனது ரசிகர்களுக்கு “டீ” போட்டு கொடுத்த அறிய வீடியோ இதோ..!

vikam
vikam

எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் மெனக்கெட்டு நடிக்கக்கூடிய நடிகர்கள் வெகு குறைவு அப்படி தமிழ் சினிமா உலகில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இருக்கின்றனர். சிவாஜி, கமலுக்கு பிறகு நடிகர் விக்ரம் அதை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களில் தனது கெட்டப்பையும் மாத்தி சூப்பராக நடித்து ரசிகர்களை சந்தோஷமடைய வைக்கிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்களில் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை அழகாக காட்டி இருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு பெரிய அளவில் இருந்தது.

மேலும் அந்த படங்கள் வெளிவந்து வெற்றியை பதிவு செய்தன இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது புதிய படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் முழுக்க முழுக்க கேஜிஎப் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகும் என கூறப்படுகிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் சினிமா நேரம் போக ரசிகர்களுடன் twitter பக்கத்தில் உரையாடுவது.

புகைப்படங்களை பகிர்வதுமாக இருந்து வருகிறார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களை நேராக சந்தித்தும் உள்ளார் அப்படி ஒரு தடவை ஷூட்டிங் முடிந்த பிறகு தனது ரசிகர்களை சந்தித்து அசத்தி உள்ளார். மேலும் ஒரு டீக்கடைக்கு சென்று என்னுடைய போட்டோ இல்லை என ஜாலியாக பேசி அசத்தி இருக்கிறார். மேலும் அங்கு தனது ரசிகர்களுக்காக நடிகர் விக்ரம் மெனக்கெட்டு டீ போட்டுக் கொடுத்துள்ளார்.

அந்த அரிய வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த ரசிகர்களும் அந்த வீடியோவை ஷேர் செய்வதோடு மட்டுமல்லாமல் லைக்குகளையும் கமாண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் உரையாடிய அந்த வீடியோ..