“வில்லன் சந்தானம்” தலையை வெட்டி எடுத்து வருவது போல காட்சி.? விக்ரம் படத்தில் உருவாக்கப்பட இருந்ததாம்- லோகேஷ் பேட்டி.

kamal
kamal

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் இவர் தனது ஆசை நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை அண்மையில் கொடுத்திருந்தார் படம்.

எதிர்பாராத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இது வரை மட்டுமே விக்ரம் திரைப்படம் 230 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக  தகவல்கள் வெளிவருகின்றன இந்த படத்தை கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் நல்ல வசூலை ஈட்டி வருவதால் கமல் மிக மகிழ்ச்சியில் உள்ளார் மேலும் படக்குழுவினர் நடிகர்களுக்கும் தொடர்பு பரிசு கொடுத்து அசத்தி வருகிறார் விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் திரைப்படம் இப்படி நல்ல பெயரை பெற காரணம் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா என ஒரு மிகப் பெரும் நட்சத்திர பட்டாளமே.

படத்தின் கதையை நன்கு உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடித்தது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் மெயின் வில்லனாக சந்தானம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து அசத்தி இருந்தார். சந்தானத்தின் மனைவியாக விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி ஆகிய மூவரும் சிறப்பாக நடித்து அசத்தி இருந்தனர்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லன் சந்தானம் ஒரு கதாபாத்திரத்தில் தலையை வெட்டுவது போல இருந்தது. இந்த காட்சியை முதலில் தலையை வெட்டி அதை எடுத்து நடந்து வருவது போல் தான் லோகேஷ் யோசித்து இருந்தாராம் ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸை மனதில் வைத்து அந்த காட்சியை எடுக்கவில்லையாம்.