தென்னிந்திய சினிமா உலகில் அண்மைக்காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் இப்போ இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை ஒரு வழியாக 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார். இது அவருக்கு கனவு படம் என்பதும் குறிப்பிடத்தக்கது மணிரத்தினம் சில வருடங்களுக்கு முன்பாகவே..
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு, மூன்று தடவை எடுக்க முயற்சித்து தோல்வியை சந்தித்தார் ஒரு வழியாக லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து விட்டார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பாக பிரமோஷனை வேற லெவலில் செய்து உள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு முதலில் தமிழ்நாடு சுற்றி புரமோஷன் செய்தது அதனைத் தொடர்ந்து கேரளா, ஹைதராபாத், மும்பை, டெல்லி என அனைத்து இடங்களுக்கும் ப்ரோமோஷன் செய்து உள்ளது இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது அதே சமயம் முதல் நாளில் மிகப்பெரிய ஒரு வசூலை முதல் நாளில் அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று கதை இதை பலர் புத்தகங்களில் படித்து இருக்கின்றனர் தற்பொழுது படமாக வெளியாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்களும் இந்த படத்தை பார்க்க ஆசைப்படுகின்றனர்.. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரீ புக்கிங் போய்க்கொண்டிருக்கிறது இந்த டிக்கெட்டை வாங்க தற்பொழுது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
ரசிகர்களே twitter பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க எனது அப்பா, அம்மாவை அழைத்து வருவேன் என கூறிக்கொண்டு வருகின்றனர் இதை பார்த்த நடிகர் விக்ரம் இன்றைய இளைஞர்கள் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க இருக்கிறார்கள் அந்த வகையில் நானும் எனது அம்மாவை இந்தப் படத்தை பார்க்க திரையரங்கிற்கு அழைத்து வருகிறேன் என கூறி உள்ளார்.