தமிழ் சினிமாவில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம் வேதா. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் சாயப் அலிகான் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பாலிவுட் சினிமாவில் மிக அதிக அளவு உள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் நடத்தப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட லக்னோவில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை தமிழில் இயக்கிய புஷ்பா மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் தான் ஹிந்தியிலும் இயக்க உள்ளார்கள்.
ஆகையால் இந்த திரைப்படத்தை தமிழில் எந்த அளவிற்கு வெற்றி கொடுத்தோமோ அதேபோல இந்தியிலும் பெருமளவு வெற்றியை கொடுப்போம் என கூறியுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுவதுமாக முடிவடைந்த பிறகு செப்டம்பர் மாதம் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளார்
இவ்வாறு வெளிவந்த தகவலின் படி நமது விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் எப்படி இருக்கும் என மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.