தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றது மட்டுமல்லாமல் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பையும் வழிவகுத்து கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
பொதுவாக சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நடிகர்களும் நடிகைகளும் வேறு தோற்றத்தில் தான் இருப்பார்கள் அதே போல தான் நமது நடிகையையும் உடல்நிலை பருமன் கூடி போய் பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக இருந்துள்ளார்.
பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தது பிறகாக உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு மிக அழகாக தோற்றம் அளித்துள்ளார் இவ்வாறு அவர் குண்டாக இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
மேலும் நமது நடிகை உடல் எடை அதிகமாக இருக்கும் பொழுது வெறும் 5 நிமிடம் மட்டும்தான் ஓடுவாராம் பின்னர் 15 நிமிடம் விடாமல் ஓட ஆரம்பித்து அதன் காரணமாக தற்போது ஐந்து வருடத்தில் சுமார் 18 கிலோ எடையை குறைத்ததாக கூரியுள்ளார்.