டாப் ஹீரோ படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கும் விக்ரம்.? இதுவரை வாங்காத ஒரு சம்பளத்தை வாங்க போகிறாராம் – அதிரும் தென்னிந்திய சினிமா.

vikram
vikram

சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை நடிப்பு திறமை என அனைத்தையும் மாற்றிக் கொண்டு நடிப்பது நடிகர் விக்ரமின் பழக்கம். அந்தக் காரணத்தினால்தான் நடிகர் விக்ரம் இன்னும் சினிமா உலகில் நீடித்து நிற்கிறார்.

மேலும் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர்  ஹிட் அடிக்கின்றனர் இப்பொழுது கூட இவரது கையில் கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு டாப் நடிகர் மகேஷ்பாபு.

இவர் இணையும் சூப்பர் படத்தில் நடிகர்  விக்ரமை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் இந்த படத்தில் விக்ரம், மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெகுவிரைவிலேயே விக்ரமுடன் பேச இருக்கிறதாம் ராஜமவுலி படக்குழுவினர்.

இது உறுதியாகும் பட்சத்தில் விக்ரம் இணைய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் இதுவரை ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 25 கோடியை சம்பளமாக வாங்கி வருகிறார். இந்த நிலையில் முதல்முறையாக வில்லனாக மற்ற மொழியில் விக்ரம் நடிக்க இருப்பதால் சம்பளத்தை பல மடங்கு உயர்ந்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

ராஜமௌலி மகேஷ் பாபு விக்ரம் போன்ற மூவரும் இந்த படத்தில் இணையும் பட்சத்தில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் இருக்கும் மேலும் அடுத்த வருடம் ஆரம்பத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தெரிய வருகிறது.