தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருபவர் இயக்குனர் ராஜமௌலி. இவரது படங்கள் மிகப்பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அதை விட மூன்று, நான்கு மடங்கு வசூலை பெற்றுத் தருவதால் இந்திய அளவில் கவனிக்க கடிய இயக்குனர்களில் ஒருவராக தற்போது மாறி உள்ளார்.
இவர் இதுவரை பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தை எடுத்து உள்ளார் அதை தொடர்ந்து இப்போது தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர்களை வைத்து RRR திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிட முனைப்பு காட்டி உள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான திரையரங்குகளை கைப்பற்றி உள்ளதால் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி யாருடன் இணைவார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தான் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் ஒரு தமிழ் ஹீரோவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து.
வருகிறதாம் நடிப்பிற்கு பெயர்போன நடிகர் விக்ரமை அந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது ஆனால் அதிகாரபூர்வ வெகு விரைவிலேயே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மகேஷ் பாபு மற்றும் விக்ரம் இணையும் பட்சத்தில் அந்த படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.