திடீரென கர்ணன் பட இயக்குனரை சந்தித்த விக்ரம்.! எதற்காக தெரியுமா.?

chiyaan-vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தனுஷ்.  இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி நடைப்போட்டு வரும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தினமும் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பல பிரபல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தைப் பற்றி பாராட்டி வருகிறார்கள்.

இதுவரையும் இல்லாத அளவிற்கு தனுஷ்க்கு இத்திரைப்படம் புகழை வாங்கித் தந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தற்போது இவர் தி கிரேட் மேன் என்ற ஹோலிவுட்டு திரைப் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

எனவே பல பிரபலங்கள் இவருக்கு மெசேஜ் மற்றும் வீடியோ கால் மூலம் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் கர்ணன்  திரைப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் கர்ணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இத்திரைப்படம் மிகவும் அருமையாக இருந்ததால் இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டிற்கு நேராக சென்று தனது பாராட்டுகளை கூறியுள்ளார்.

அதோடு அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.