நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக் காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அதில் அவரது நடிப்பு வேற லெவெலில் இருப்பதால் அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார்.
அத்தகைய படமும் ஹிட் அடிப்பதால் சினிமா உலகில் முன்னேறி செல்கின்றார். விக்ரம் தற்போது நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறி உள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் சீயான் 60 மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய சிறப்பு கூறிய திரைப் படங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படங்களிலும் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.
சமிப காலமாக வெற்றியை கொடுக்காத விக்ரமுக்கு இந்த திரைப்படங்கள் நிச்சயமாக நடிப்பதால் அவர் வெகுவிரைவிலேயே யாரும் தொட முடியாத ஒரு உச்சத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் கல்லூரி படிப்பு படிக்கும்போது இவருடன் இணைந்து பல நடிகர்கள் சேர்ந்து படித்து உள்ளனர்.
நடிகர் விக்ரம் லயோலா கல்லூரியில் ஆங்கில படிப்பை மேற்கொண்டார் அப்பொழுது இவருடன் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் இயக்குனர் தரணி, ஆணழகன் நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் ஒன்றாகத்தான் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை சமூகவளைதத்தள பக்கத்தில் கொண்டாடுகின்றனர்.