Actor Vikram: நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட்டை கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த படத்தினை தற்போது தான் ரிலீஸ் செய்ய படக் குழு முடிவெடுத்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு புகழும் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். அப்படி நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திர படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நாடித்துள்ளார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளீட ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
4 ஆண்டுகளாக ரிலீசாகாமல் கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படத்தினை தற்பொழுது ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். அப்படி துருவ நட்சத்திரம் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
மேலும் படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோக்கள் போன்றவை வெளியாகியிருக்கும் நிலையில் இந்த முறையாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இவ்வாறு துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
https://x.com/menongautham/status/1705454581763690817?s=20