Dhruv vikram Latest photos : சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே கதையில் உள்ள கதாபாத்திரமாகவே தன்னையும் தனது உடல் அமைப்பையும் மாற்றிக் கொள்வார்கள், அந்தவகையில் நடிகர் சியான் விக்ரம் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்வார்.
விக்ரம் நடித்த சேது, அந்நியன், ஐ, இருமுகன் என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம், விக்ரம் என்னதான் கதைக்கு தேவையான கதாபாத்திரமாக உடலை வருத்திக்கொண்டு நடித்தாலும் ஒரு சில திரைப்படங்கள் வசூல் ரீதியாக சொல்லிக்கொள்ளும் வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் விக்ரம் நீண்டநாட்களாக மாபெரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், அதனால் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் இந்த திரைப்படமாவது ஹிட் அடையும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார் விக்ரம்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இவரும் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார், இவர் நடித்த முதல் திரைப்படம் தான் ஆதித்யா வர்மா, அர்ஜுன் ரெட்டி இன் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா, ஆதித்யா வர்மா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்தநிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் திரைப் படத்தில் விக்ரம் 60 திரைப்படத்தில் இணைந்துள்ளார் படத்தை செவன் ஸ்கின் ஸ்டுடியோ லலித் குமார் தான் தயாரிக்க இருக்கிறார், அதனால் விக்ரம் இந்தத் திரைப்படத்திற்காக தாறுமாறாக உடலை ஏற்றி கட்டுக்கோப்புடன் வைத்துக்கண்டு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த போட்டோ ஷூட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள் அது ரசிகர்களிடம் வைரலாகியது.
இதனைத்தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வெறித்தனமாக உடல் எடையை ஏற்றி கட்டுமஸ்தான உடலுடன் தன்னுடைய அப்பா எட்டடி பாய்ந்தால் தான் பதினாறடி பாய்வேன் என்பதை நிரூபிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
இதொ அந்த புகைப்படம்.