தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து விளங்குபவர் நடிகர் சியான் விக்ரம் இவர் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்த அடுத்ததாக தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஒகேனக்கல் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒகேனக்கல் நீரோடையில் விக்ரம் பா ரஞ்சித் என பட குழுவினர் அனைவரும் அந்த நீரோடையில் ஜாலியாக குளிக்கும் வீடியோவை விக்ரம் அவர்கள் பகிர்ந்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லையாம் விக்ரம் அனைவரும் வா போகலாம் என்று கூறியும் முடியவே முடியாது என்று கூறிவிட்டு அவருடைய நண்பர்களுடன் ஜாலியாக தண்ணீரில் குதித்து விளையாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக தங்கலான் படத்தின் இயக்குனர் பா ரஞ்சித்தையும் விடவில்லை அவரையும் இழுத்து போட்டு ஜாலியாக குளித்து இருக்கிறார்கள்.
1800 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிபடையாக கொண்டு தங்கலான் படம் உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள அந்த நீரோடையில் ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் விக்ரம் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படத்தின் படபிடிப்பு கடினமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. தண்ணீர் வா வா அழைத்தது. பேக்கப் என்று சொன்னவுடன் ஒரே குதி அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மதுத்ததுதான் மிச்சம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார் விக்ரம்.
இதோ அவர் பதிவிட்ட வீடியோ…
இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். pic.twitter.com/6NCiU6ezGQ
— Vikram (@chiyaan) December 5, 2022