sethu movie : சினிமாவில் முட்டி மோதி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் பாலா மூலம் தனக்கான இடத்தை பிடித்தவர் விக்ரம் அந்த திரைப்படம் தான் சேது இது திரைப்படத்திற்கு இளையராஜா இதுதான் இசையமைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் படத்தை பாலா எழுதி இயக்கியிருந்தார் படத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமன், மோகன் வைத்யா பாரதி என பலரும் நடித்திருந்தார்கள் 1999 ஆம் ஆண்டு வெளியாகி இந்த திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.
கல்லூரியில் தலைவனாக இருக்கும் சேது அதே கல்லூரியில் புதிதாக படிக்க வரும் அபிதாவை காதலிக்கிறார் ,அவள் மீது இருந்த காதலை வெளிப்படுத்தி பலமுறை தெரிவிக்கின்றார். இருப்பினும் அபிதா பயத்துடன் காணப்படுகிறாள் இதனைப் பார்த்த சேது அபிதாவை கடத்தி சென்று என்னை காதலிக்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார் இதன் பின்னர் சேதுவை காதலிக்கிறார் அபிதா.
அந்த இடத்தை அழகாக காட்ட ஒரே ஒரு ஊசி.. சிறகடிக்க ஆசை நடிகை பகிர்ந்த விபரீத விஷயம்..
இதற்கிடையில் சேதுவின் எதிரிகளால் சேது தாக்கப்பட்டு மன நோயாளியாக மாறுகிறார் பின்னர் மனநோயாளி காப்பகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார் சேதுவுக்காக ஏங்கிக் கொண்டிருந்த அபிதாவிற்கு அவர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வைக்கிறார்கள் மன நோயாளி காப்பகத்தில் சேது என்ற விக்ரமுக்கு நினைவு திரும்பியதும் உடனே அங்கிருந்து தப்பித்து வருகிறார் தப்பித்த சேது அபிதா வீட்டை நோக்கி ஓடுகிறார் அங்கு அபிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து மனம் நொந்து போகிறார் இதுதான் திரைப்படத்தின் கதை.
அப்பொழுதைய காலகட்டத்தில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது மேலும் இந்த திரைப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம், இன்றளவும் சேது திரைப்படத்தை விக்ரம் மறந்திருக்க மாட்டார் அந்த அளவு அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது ஏனென்றால் விக்ரம் சினிமாவில் ஜொலிக்க முடியாத இருந்த காலத்தில் சொந்தக்காரர்கள் கூட கை கொடுக்கவில்லை.
சரி வா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கலாம்ன்னு கேட்டதே அந்த நடிகை தான்.. சிங்கிக்கொண்டு தவித்த இயக்குனர்..
அவரை தூக்கி விட்டது பாலா தான் என பலமுறை விக்ரம் கூறியுள்ளார் சேது திரைப்படம் வெளியாகிய 24 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது அதன்படி சேது திரைப்படம் உலக அளவில் 13 முதல் 15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.