நவரச நாயகன் கார்த்திக்கு வந்த பட வாய்ப்பை தட்டி பறித்த விக்ரம் – படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்..

vikram-
vikram-

நடிகர் விக்ரம் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ. இவர் தன்னுடைய படங்களின் கதைக்கு தனது உடம்பை வற்புறுத்தி நடிக்க கூடியவர் அதனால் தான் அவரது படங்கள் ஒவ்வொன்றும் இப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் நடிகர் விக்ரம் பாசிட்டிவாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் தற்பொழுது அவரது கையில் தங்களான் மற்றும் ஒரு சில புதிய படங்கள் கைவசம் இருக்கின்றன அந்த படங்களிலும் சூப்பராக நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் சேது திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..  பாலா இயக்கத்தில் கந்தசாமி தயாரிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சேது இந்த திரைப்படத்தில் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மட்டுமே ஒன்பது நடிகர்களை பாலா அணுகி இருக்கிறார் ஆனால் யாரையும் பிடிக்கவில்லையாம். இந்த படத்தின் தயாரிப்பாளர் முதலில் கார்த்தியை நடிக்க வைக்க திட்டம் போட்டார்..

அந்த சமயத்தில் கார்த்தி பூமணி படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருந்தார் பாலாவும் தயாரிப்பாளர் கந்தசாமியும் சிறிது நேரம் கழித்து கார்த்தியை சந்தித்துள்ளார் கார்த்தியை வைத்து ஒரு ஐந்து லட்சத்திற்கு சம்பளம் பேசி முடித்துவிட்டு சேது படத்தில் நடிக்க வைத்து விடலாம் என யோசித்து இருந்தனர்.

ஆனால் கார்த்தியோ கதை கேட்டுவிட்டு 40 லட்சம் சம்பளம் என கேட்க உடனே தயாரிப்பாளர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என கூறி கடைசியாக இளம் நடிகர் விக்ரமிடம் தஞ்சம் அடைந்தனர் பிறகு படம் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாம்.