சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திறமையை வெளிக்காட்டும் நடிகர் நடிகைகள் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் அந்த வகையில் சிவாஜியை தொடர்ந்து பிரபு அவரை தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபு.
சினிமா உலகில் தற்போது பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் முதலில் வெளியான கும்கி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு இவன் வேற மாதிரி, இது என்ன மாயம், சிகரம் தொடு போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக மாறியது.
அதன் பின் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் இவரது நடிப்பு சூப்பராக இருந்தாலும் வெற்றியை ருசிக்க தவறியது. இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள இயக்குனர் விக்ரம் பிரபு தற்போது சிறந்த இயக்குனர்களிடம் கைகோர்த்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் விக்ரம் பிரபு கையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடாத படாத பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதனால் வெற்றியை ருசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் பிரபு பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விக்ரம் பிரபு ஒரு நடிகராக தான் நமக்கு தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்பாகவே சினிமா உலகில் தென்பட்டு உள்ளார்.
முதலில் சினிமா உலகில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் அந்த வகையில் அஜித்தின் அசல், ஆர்யாவின் சர்வம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு பின் தான் இவர் ஹீரோ அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.