அண்மைக்காலமாக சிறந்த இயக்குனர்கள் சிறப்பான படங்களை எடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் விசாரணை, அசுரன் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார் அவரை தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
அந்த வகையில் வெற்றிமாறனுடன் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் தமிழ். இவர் உண்மையில் போலீஸ்காரர் சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக வெற்றிமாறனிடன் வேலை செய்தார். தற்போது விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் உண்மையில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நடக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக இது இருந்துள்ளது.
டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் நேற்று இந்த படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் கூறுகையில் புதிய படத்திற்காக தற்போது அமெரிக்காவில் உள்ளேன்.
டாணாக்காரன் படத்திற்கு கிடைக்கும் விமர்சனங்கள் மகிழ்ச்சியளிக்கிறது மலையாளத்தில் அமைதியான போலீசாக நடித்துள்ளேன். அந்த படம் எனக்கு விருதை பெற்று தந்தது அதன்பின் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். இயக்குனர் தமிழ் புதியவர் என்றாலும் நன்கு தேவையானதை எடுத்து உள்ளார்.
இந்த குழுவில் பணியாற்றியது நல்ல அனுபவத்தை கொடுத்து இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் பிரபு என்னை பார்த்து பயந்து இருக்கிறார். மனுஷன் மிகவும் அமைதியானவர் தேவை என்றால் மட்டுமே பேசவார். நல்ல படங்களில் நடித்த அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக் கூறினார்.