மேடையில் ஸ்ரீநிதியை பங்கமாக கலாய்த்த விக்ரம்.! இது தேவைதானா..

gopra
gopra

நடிகர் சியான் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலைகள் தற்பொழுது பட ப்ரோமோஷன் பணியில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி நடித்திருக்கிறார் மேலும் இவர்களைத் தொடர்ந்து மிருணாளினியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் தொடர்ந்து மேலும் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் பணிகளிலும் பிசியாக இருந்த வருகிறார் விக்ரம்.

இப்படிப்பட்ட நிலையில் பொது இடங்களில் தனக்கே உரிய தான பாணிகள் கேலியும் கிண்டலும் செய்து செம ரகளை செய்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் பிரஸ்‌ மீட்டில் கலந்து கொண்ட பொழுது நடிகை ஸ்ரீநிதி தான் சின்ன வயதில் இருக்கும்பொழுது அந்நியன் படம் பார்த்தேன் அதிலிருந்து விக்ரம் கூட எப்படியாவது நடிக்க வேண்டும் என்னுடையது மிகப்பெரிய ஆசை எனக் கூறியிருந்தார்.

இவர் பேசியதை கவனித்த விக்ரம் அடுத்ததாக அவர் பேசும் பொழுது நான் காலேஜ் படிக்கும் பொழுது ஸ்ரீநிதி நடித்த கே ஜி எஃப் படம் பார்த்தேன் நான் நடித்திருக்க வேண்டிய இடத்துல யாஷ் நடித்திருக்கிறார் இதனை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் வலித்தது.எப்படியாவது இவங்க கூட நடிக்கணும் என்று நினைத்தேன் இப்போ என் கனவு நினைவாகி விட்டது எனக் கூறினார்.அதற்கு ஸ்ரீநிதி சும்மா சொல்லாதீங்க என கூறியதற்கு பின்னால் அவங்க மட்டும் சின்ன வயசுல அன்னியன் படம் பார்த்தேன் என்று சொன்னால் நல்லா இருக்கானு சொல்லி ஸ்ரீநிதியை கலாய்த்து தள்ளிவுள்ளார்.