கல்லாப் பெட்டியை திறந்து வைத்திருக்கும் “விக்ரம்” படம் -இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

vikram-movie
vikram-movie

அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது அந்தவகையில் கேஜிஎப், RRR, புஷ்பா போன்ற படங்களைத் தொடர்ந்து இந்த லிஸ்டில் தற்பொழுது இணைந்துள்ள திரைப்படம் தான் கமலின் விக்ரம் படம்.

நான்கு வருடங்களுக்கு பிறகு கமல் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. விக்ரம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே படத்தின் எதிர்பார்ப்பு இந்திய அளவில் இருந்தது.

ஒன்றாம் தேதி படம் வெளிவந்தது  எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருந்ததால் வெளியாகி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் இந்த திரைப்படம் வசூலில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என படத்தை பார்த்த பலரும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார்போல முதல் நாளே உலக அளவில் 66 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

தமிழகத்தில் மட்டும் 23.27 கோடி வசூல் செய்து அசத்தியது இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டாவது நாள் கமலின் விக்ரம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் இரண்டு நாள் முடிவில்  சேர்த்து சுமார் 43 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது நாளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி உள்ளதால் வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என கூறிவருகின்றனர் இப்பொழுது டாப் நடிகர்களான ரஜினி,  அஜித், விஜய் போன்ற நடிகர்கள் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது கமலின் விக்ரம் திரைப்படம்.