உலக நாயகன் கமலஹாசன் சினிமா உலகில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமையை பெற்று இருந்தார். அதனாலையே சிறந்த இயக்குனர்கள் எப்பொழுதும் உலக நாயகனை நாடுவது வழக்கம் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் ஒரு வழியாக உலகநாயகன் கமலஹாசனை சந்தித்து விக்ரம் படத்தின் கதையை கூறியுள்ளார்.
அந்த கதை கமலுக்கு ரொம்ப பிடித்துப் போகவே துணிச்சலாக நடிக்க ஆரம்பித்தார் மேலும் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தது. இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர்.
படம் ஒரு வழியாக கடந்த ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக கமலின் விக்ரம் திரைப்படம் பிரம்மாண்டமான வசூலை அள்ளியது. இதுவரை மட்டுமே விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் 400 கோடி வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 400 கோடி வசூலை அல்ல முக்கிய காரணம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களான தெலுங்கு கேரளா என பல மொழிகளிலும் நல்ல வசூல் வேட்டை கண்டது அதன் காரணமாகவே இவ்வளவு வசூல் அல்ல முடிந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலத்தில் மட்டுமே சுமார் 50 நாட்களில் மட்டுமே 50 கோடி ஷேர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது இதன் மூலம் விக்ரம் படத்திற்கு சுமார் 10 கோடியை விட அதிக லாபம் என சொல்லப்படுகிறது. இது போன்ற பல்வேறு இடங்களில் விக்ரம் திரைப்படம் லாபத்தை ருசித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.