உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் பான் இந்திய அளவில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் .
இவர் கமலஹாசனின் தீவிர ரசிகர் ஆவார். அதனால் ஒரு ரசிகனாய் தனது ஆசை நாயகனுக்காக பார்த்து பார்த்து கதையை செதுக்கி உள்ளார். படமும் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் கமலின் நடிப்பு எவ்வளவு பாராட்டப்படுகிறதோ அது போல படத்தில் நடித்துள்ள மற்ற முக்கிய நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றவர்களின் நடிப்பைப் பற்றியும் ரசிகர்கள் நல்லவிதமான கமெண்டுகளையே கொடுத்து வருகின்றன.
விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமலஹாசன் இந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் பலருக்கும் பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இருக்கு ஒரு விலை மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் மேலும் இந்த படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் வழங்கியுள்ளார் கமலஹாசன்.
இதனிடையில் படம் பல்வேறு இடங்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் ஐந்து நாள் முடிவில் உலகம் முழுவதும் 200 கோடி வரை வசூலித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்து கேஜிஎப் 2, RRR போன்ற படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்த நிலையில் அந்தப் படங்களின் லிஸ்டில் விக்ரம் கூடிய விரைவில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.