உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சினிமா தான் அவரது பிரதான தொழில் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவையும் தாண்டி அரசியல், வியாபாரம் போன்றவற்றிலும் தலைகாட்டி அசத்தி வந்தார் இருப்பினும் சினிமா அவரை விட்ட பாடு இல்லாமல் துரத்திக் கொண்டுதான் இருந்தது.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ், கமலை சந்தித்து விக்ரம் படத்தின் கதையை சொல்ல அது ரொம்ப பிடித்து போகவே கமல் அந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்தார் படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.
விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்தப் படம் திரையங்கில் ஒட்டுமொத்தமாக சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது மேலும் திரையரங்கையும் தாண்டி இந்த படம் OTT தளத்திலும்.. சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படி இருந்தாலும் பல்வேறு திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது இந்த திரைப்படம் இதுவரை 100 நாட்களை தொட்டுள்ளது. அதை முன்னிட்டு உலகநாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ஆடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் சொன்னது என்னவென்றால் விக்ரம் திரைப்படம் 100 நாட்களை தொட்டுள்ளது.
எனக்கு அது சந்தோஷத்தை கொடுத்துள்ளது பல தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என கமல் சொன்னார். மேலும் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்களும் விக்ரம் படத்தின் 100 வது நாளை முன்னிட்டு கொண்டாடி வருகின்றனர்.
#100DaysofVikram #VikramRoaringSuccess pic.twitter.com/7SjZIpTB6M
— Kamal Haasan (@ikamalhaasan) September 10, 2022