10 நாள் முடிவில் மிகப்பெரிய ஒரு தொகையை வசூல் செய்த விக்ரம் திரைப்படம் – மிரண்டுபோன தென்னிந்திய சினிமா.!

kamal
kamal

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் படங்களுக்கு பிறகு நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஒருவழியாக லோகேஷ் சொன்ன கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் படம் சூப்பராக உருவாகி ஜூன் மூன்றாம் தேதி கோலாகலமாக வெளியாகியது.

மற்ற படத்தைவிட இந்தப் படத்தின் கதைகளம் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது தொடர்ந்து படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலஹாசனுக்கு நிகராக பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன் போன்றவர்களும் சூப்பராக நடித்து அசத்தினார்.

இந்தக் காரணத்தினால் உலகநாயகன் கமலஹாசன் பட குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு பரிசுப் பொருட்களையும் கொடுத்து அழகு பார்த்தார் அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. கமலின் விக்ரம் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு 260 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில்..

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பார்க்கையில் 10 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் ரூ 300 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி கே ஜி எஃப், RRR படங்களுக்கு நிகராக இந்த திரைப்படம் ஒரு மிகப் பிரமாண்ட வசூலை அள்ளி நிற்கும் என கூறப்படுகிறது .

இந்த திரைப்படம்  கமலின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைய இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் அடுத்தடுத்த இயக்குனர்களுடன் கதை கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.