கேரளாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விக்ரம் திரைப்படம் – இவரை அள்ளிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

kamal
kamal

இளம் இயக்குனர்கள் அண்மைகாலமாக சிறந்த படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர். அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை கொடுத்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனுக்கு விக்ரம் படத்தின் கதையை கூறியுள்ளார்.

அது அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே உடனடியாக படமாக எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை கமல்தான் தயாரித்தார் என்பது குறிபிடத்தக்கது படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெற்றியடைய முக்கிய காரணம் படத்தின் கதை அதற்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை தவிர்த்து விஜய் சேதுபதி பகத் பாசில் சூர்யா போன்றவர்களின் நடிப்பும் மிரட்டும் வகையில் இருந்தது. அது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது.

தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 130 கோடியும் கேரளாவில் நேற்று மட்டுமே ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவையும் தாண்டி கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதுவரை கேரளாவில் விக்ரம் திரைப்படம் 32.32 கோடி வசூல் செய்துள்ளதாம். விஜயின்  கோட்டையாக கருதப்படும் கேரளாவில் தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் தான் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதனால் தற்போது கமலின் கொடி அங்கு ஜோராக பறந்து கொண்டிருக்கிறது.