விக்ரம் படம் வெற்றி : உதவி இயக்குனர்களுக்கு apache – லோகேஷ் கனகராஜிக்கு என்ன பரிசு தெரியுமா.?

kamal-logesh
kamal-logesh

தமிழ் சினிமாவில் கைதி மாஸ்டர் போன்ற ஆக்ஷன் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அவரது ஃபேவரட் நாயகன் கமலஹாசனுக்கு ஒரு சிறப்பான கதையை ரெடி செய்து கமலிடம் அந்தக் கதையைக் கூற அவருக்கும் பிடித்துப்போக விக்ரம் என்னும் திரைப்படம் உருவாகியது.

மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளதால் கமல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் கமலுக்காக பார்த்து பார்த்து எழுதியுள்ளதால் படம் சிறப்பாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர் எதிர்பார்த்தபடியே கடந்த ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

அண்மையில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் விக்ரம் படம் வெளிவந்த நாட்களிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விக்ரம் படம் தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, அமெரிக்கா, கேரளா போன்ற பல இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகின்ற நிலையில் உலக அளவில் 180 கோடிக்கு மேல் வசூல் செய்து போய்க்கொண்டிருக்கிறது.விக்ரம் படம் கே ஜி எஃப் 2, RRR போன்ற படங்களுக்கு நிகராக வசூல் வேட்டை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கமல் ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார். லோகேஷ் தவிர அந்த படத்தில் பணியாற்றிய மற்ற 13 உதவி இயக்குனர்களுக்கும் TVS Apache RTR 160 பைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.