நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் பலர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறது அதேபோல் தற்போதும் ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டது.ஏற்கனவே சரிதா ஆட்சியின்போது விஸ்வரூபம் படம் இதேபோல் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் படத்தை ஜெயா டிவி விலகி கேட்டபோது படம் பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் கமல்ஹாசன் ஜெயா டிவிக்கு விற்பனை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் சில இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு விஸ்வரூபம் படத்திற்காக போராட்டம் நடத்தி வைத்துள்ளார்.
அதேபோல தற்போது கமல்ஹாசன் நடித்து உள்ள விக்ரம் படத்தில் இருந்து வெளியான பத்தல பத்தல என்ற பாடலில் அரசியலைப் பற்றி பாடியிருப்பதால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அதுமட்டுமல்லாமல் இந்தப்பாடல் பல விமர்சனங்களை பெற்று வருகிறது.இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விரைவில் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படம் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி கொண்டது.
அந்த வகையில் விக்ரம் படத்தை நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட இருக்கிறார்.இந்த நிலையில் இந்தப் பாடல் திமுக அரசை விமர்சனம் செய்யும் விதமாக இந்த பாடல் இடம் பெற்றதால் விக்ரம் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாங்கி வெளியிடக்கூடாது என திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
இதனால் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில வருடங்கள் கழித்து கமலின் படம் வெளியாக உள்ளது என்ற சந்தோசத்தில் இருந்து வந்த ரசிகர்களுக்கு விக்ரம் படம் வெளியாகுமா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.