விக்ரம் படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என புகைப்படத்துடன் உறுதி செய்த ஷிவானி.! வைரலாகும் புகைப்படம்.

shivani-at-vikram-shooting-spot
shivani-at-vikram-shooting-spot

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை இயக்கும் வல்லமை படைத்தவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்ததாக கமலஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப் படத்திலும் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.  விஜய் சேதுபதியுடன் இணைந்து பகத் பாசில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் மூன்று முன்னணி நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் நடித்து வருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் மூன்று பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது அதில் ஒருவர் பிக்பாஸ் ஷிவானி.

shivani-at-vikram-shooting-spot
shivani-at-vikram-shooting-spot

ஆனால் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை இந்த நிலையில் சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் அப்பொழுது ரசிகர் ஒருவர் விக்ரம் திரைப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த சிவானி. சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கான ஒதுக்கியுள்ள கேரவன் புகைப்படத்தை பகிர்ந்து அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து மைனா நந்தினி  இந்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதோ புகைப்படம்.

shivani-at-vikram-shooting-spot
shivani-at-vikram-shooting-spot