சென்னை ஏரியாவில் மாஸ் காட்டும் விக்ரம் திரைப்படம் – 3 வார முடிவில் அள்ளிய மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா.?

kamal
kamal

சினிமா உலகில் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் புதுமையை காட்ட ஆசைப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன். இருப்பினும் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே வராமல் இருந்த உலக நாயகன் கமலஹாசனை தேடி போய் இளம் இயக்குனர் லோகேஷ்.

விக்ரம் படத்தின் கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே உடனடியாக அந்த படத்தை தயாரித்தும், நடிக்கவும் செய்தார் கமல். படத்தின் கதைக்கு ஏற்றவாறு   கமலுக்கு இணையாக நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நடிகருமான பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா போன்றவர்கள் இந்த படத்தில் நடித்தது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை  இன்னும் அதிகரிக்க செய்தது.

ஒருவழியாக படம் ஏப்ரல் 3ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீசானது மக்கள் எதிர்பார்த்ததை விட படம் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அதிகமாக இருந்ததால் படம் அனைத்து ஏரியாக்களிலும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக தற்போது எதிர்பார்த்த வசூலை அள்ளி அசத்தி வருகிறது விக்ரம் திரைப்படம்.

இதுவரை உலக அளவில் மட்டுமே சுமார் 350 கோடி அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி ஒரு புதிய உச்சத்தை எட்டும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் நன்றாகவே வசூலை அள்ளிக் வருவதோடு படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக சென்னையில் மட்டுமே இதுவரை விக்ரம் திரைப்படம் சுமார் 14. 53 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெகுவிரைவிலேயே 15 கோடியைத் தொட்டுவிடும் என கூறப்படுகிறது. நேற்று மட்டுமே சென்னையில் மட்டும் விக்ரம் திரைப்படம் சுமார் ஒரு கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.