கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் – திரைவிமர்சனம்.!

vikram
vikram

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக பல திரைப்படங்களை ரெட் ஜெயன்ட்  மூவி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை வாங்க பார்க்கலாம்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி போதை பொருள் செய்வதை தொழிலாக வைத்திருக்கிறார் ஆனால் ஒரு காலகட்டத்தில் பல கோடி மதிப்பிலான சரக்கு சீக்ரெட் ஏஜென்டாக இருக்கும் கமலஹாசனின் மகன் காளிதாஸ் இடம் கிடைத்து விடுகிறது ஆனால் இதை கெட்டவர்களின் கைகளில் கிடைத்து விடக்கூடாது என அதனை பதுங்கி வைக்கிறார் காளிதாஸ். பல கோடி மதிப்பிலான சரக்கை பதுக்கி வைத்துள்ள காளிதாஸ் ஒரு காலகட்டத்தில் விஜய் சேதுபதியிடம் சிக்கிக் கொள்கிறார்.

என்னுடைய சரக்கு எனக்கு வேண்டும் என விஜய் சேதுபதி காளிதாசை கொன்றுவிடுகிறார் ஆனால் சரக்கு மட்டும் விஜய் சேதுபதியிடம் கிடைக்கவே இல்லை.இந்த நிலையில் தன்னுடைய மகனைக் கொன்றதற்காகவும் போதைப்பொருள் இனிவரும் தலைமுறைக்கு கிடைக்கவே கூடாது என்பதற்காகவும் மறைந்து இருந்து போராடி வருகிறார் கமலஹாசன்.

மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் பல கொலைகள் நடைபெறுகிறது அதனைக் கண்டுபிடிக்க விசாரணை செய்யவும் காவல்துறையால் மறைமுகமாக நியமனம் செய்யப்படுகிறார் பகத் பாஸில்  விசாரணையை மேற்கொண்டு வரும் பகத் பாசிலுக்கு அடுத்தடுத்து சில மர்மங்கள் ஆன விஷயங்கள் தெரிய வருகிறது ஒரு காலகட்டத்தில் விசாரணை செய்ய வந்த பகத் பாசிலுக்கு கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் கிடைத்து விடுகிறது.

அதன்பிறகு கதையில் என்ன நடந்தது விஜய் சேதுபதிக்கு அந்த சரக்கு கிடைத்ததா கமலஹாசன் போதைப்பொருளை ஒழித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் வரும் ஒவ்வொரு காட்சியும் கைதட்டலுக்கு பஞ்சமே இருக்காது அந்த அளவு சென்டிமென்ட் காட்சிகள் சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார். அதிலும் குறிப்பாக இன்டர்வெல் காட்சியில் கமலஹாசன் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். அதேபோல் வில்லனாக வரும் விஜய் சேதுபதி ஒவ்வொரு காட்சியிலும் தனித்து நிற்கிறார் கமலுக்கு நிகரான வில்லனாக தன்னை  வில்லனாகவே மாற்றிக் கொண்டார்.

நடிப்புத் திறமையை யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு விஜய்சேதுபதியை தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் பகத் பாசில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் ஒரு சென்டிமென்ட் காட்சியில் நம்மை மிரட்டி விட்டார் பகத் பாசில், நரேன் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்தது.

ரமேஷ் திலக், ஜாபர் ,மைனா நந்தினி, சிவானி, மகேஸ்வரி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருந்தார்கள் சிறப்பான தரமான படத்தை லோகேஷ் கனகராஜ் மொத்த ரசிகர்களும் கொடுத்துவிட்டார். மேலும் இந்த திரைப்படத்தில் கதையாகவும் சரி டெக்னிகல் ஆகவும் லோகேஷ் கனகராஜ் திறம்பட இயக்கியுள்ளார். அதேபோல் அனிருத் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் படத்திற்கு ஒளிப்பதிவு படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

ஆக்ஷன் காட்சிகளில் அன்பறிவு அதகளம் பண்ணி விட்டார் மேலும் துணை இயக்குனர் இயக்குனர் என ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களுக்கு கொடுத்த சிறந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு படத்திற்கு பக்க பலம் சேர்த்துள்ளார்கள். படத்தில் கடைசியாக சில நிமிடங்கள் வந்தாலும் திரையரங்கை அதிர வைத்து விட்டார் சூர்யா.

விக்ரம்  வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.