கமல் எப்பொழுதும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் கடந்த நான்கு வருடங்கள் கழித்து ஒரு வழியாக லோகேஷ் கனகராஜ் சொன்ன ஆக்சன் கதை ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் மேலும் அந்தப் படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்தார் என்பது குறிபிடத்தக்கது.
படம் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார்.
படத்தின் கதை களம் சிறப்பாக இருந்தாலும் இவர்களது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் படம் மக்களுக்கு ரொம்ப பிடித்து போனதாகவும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதும் இந்த படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதால் நாளுக்கு நாள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
விக்ரம் திரைப்படம் வெளியாகி 23 நாட்களை தொட்டு உள்ளது. இதுவரையில் ஒரு பிரம்மாண்ட வசூலை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை தற்பொழுது விக்ரம்படம் அதை செய்து உள்ளது.
விக்ரம் திரைப்படம் தற்பொழுது வரை சுமார் 390 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களிலேயே 400 கோடியை விக்ரம் திரைப்படம் கடந்து விடும் என கூறப்படுகிறது. இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.