எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்துவது கமலின் வழக்கம் அந்த வகையில் ஆக்சன் படங்களை கொடுத்து அசத்தி வரும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கமலுடன் கைகொடுத்து நடித்த திரைப்படம் தான் விக்ரம்.
இந்த படம் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களுக்கு ரொம்ப பிடித்தமான படமாக தற்போது மாறியுள்ளது படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மிக பிரமாண்ட வசூலை அள்ளி வருகிறது விக்ரம் திரைப்படம்.
விக்ரம் படத்தில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் தாண்டி அனைத்து விதமான ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் முதல் நாளில் மட்டுமே 66 கோடி உலக அளவில் வசூல் செய்த விக்ரம் திரைப்படம்.
இரண்டாவது நாளிலும் மிகப் பிரமாண்டமான ஒரு வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது இரண்டாவது நாள் மட்டுமே 50 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் இரண்டு நாட்களில் 100 கோடியை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி RRR, கே ஜி எஃப் படங்களுக்கு நிகராக விக்ரம் படம் வரும் என கூறிவருகின்றனர்.