விக்ரம் படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக இந்த மாஸ் ஹீரோவா.! வெளியானது சுவாரஸ்ய தகவல்

kamal-vikram

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து அடுத்ததாக கமலஹாசன் அவர்களை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அனைத்தும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்று திரைப்படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் இந்திய அளவில் அவரை உற்று நோக்கும் படி அவரின் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்த நிலையில் தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆதரவு இருந்து வருகிறது லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு.

இவர் இயக்கத்தில் வெளியாகிய கைதி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது அதேபோல் அடுத்ததாக இயக்கிய மாஸ்டர் திரைப்படமும் சொல்லவே வேண்டாம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையான இருக்கும் வில்லன் பவானி கதாபாத்திரத்தை பாராட்டாதவர்களே கிடையாது இந்த நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அவர் ரேஞ்ச்  தனி என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் இவருக்கு வில்லனாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது இந்த நிலையில் கமலஹாசனுக்கு வில்லனாக பிரபுதேவா நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்பொழுது பிரபல நடிகர் தான் வில்லனாக நடிப்பதற்கு தீவிர பரிசோதனை செய்து வருகிறார்களாம் படக்குழு. அவர் வேறு யாரும் கிடையாது இயக்குனரும் நடிகருமாக தமிழ் சினிமாவில் பணியாற்றிவரும் ராகவா லாரன்ஸ் தான் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் தீயாய் பரவி வருகிறது.

ராகவா லாரன்ஸ் கமலுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இருந்தாலும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது.

மேலும் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் மிக ஈடுபாடு இருப்பதால் படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் வில்லன் மற்றும் ஹீரோயின் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ragava
ragavaragava lawrence