உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்கள் கழித்து நடித்த திரைப்படம் விக்ரம் இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களத்தில் லோகேஷ் கனகராஜ் எடுத்திருந்தார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து டாப் நடிகரான விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர்.
படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் தற்போது அடித்து நொறுக்கி வருகிறது. எட்டு நாள் முடிவில் உலக அளவில் மட்டும் 260 கோடி வசூல் செய்திருந்தது.
வருகின்ற நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவும் படத்தை தயாரித்த கமலும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். சந்தோஷத்தை மற்றவர்களுக்கும் பகிர தான் நடிகர் கமலஹாசன் இயக்குநருக்கு சொகுசு கார் உதவி இயக்குனருக்கு 13 பேருக்கு அப்பாச்சி பைக், நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என கொடுத்து அசத்தி இருந்தது.
இது ஒரு பக்கம் இப்படி இருக்க மறுபக்கம் உலகநாயகன் கமலஹாசன் அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் இந்த நிலையில் நேற்று கமலஹாசன் அவர்கள் ஹைதராபாத் சென்ற போது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டிற்கு செல்ல கமலஹாசன் விக்ரம் படம் வெற்றி பெற சிரஞ்சீவி வாழ்த்து சொன்னார்.
கமல்ஹாசன், சிரஞ்சீவி உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் டாப் ஹீரோ சல்மான்கானும் கூட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
Absolute joy,celebrating & honouring my dearest old friend @ikamalhaasan for the spectacular success of #Vikram along with my dearest Sallu Bhai @BeingSalmanKhan @Dir_Lokesh & team at my home last night.What an intense & thrilling film it is!!Kudos My friend!! More Power to you! pic.twitter.com/0ovPFK20r4
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 12, 2022