இளம் இயக்குனர்கள் அண்மைக்காலமாக சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து மாநகரம் கைதி மாஸ்டர் இப்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து பிரமாண்டமாக திரைப்படத்தை கொடுத்து அசத்தி உள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே தலை திரும்பாமல் இருந்த கமலஹாசனை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்துள்ளது மிகப்பெரிய பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. விக்ரம் படத்தின் கதை முழுவதும் பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதை வித்தியாசமாக இருந்ததால் தற்பொழுது ரசிகர்களையும் தாண்டி மக்கள் கூட்டம் இந்த படத்தை பெரிய அளவில் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர் இந்த திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கண்டு வருகிறது அதன் காரணமாக வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் 19 நாள் முடிவில் கமலின் விக்ரம் திரைப்படம் 374 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.
தமிழகத்தில் – 162 கோடிகள், கேரளாவில் – 36 கோடிகள், AP – / TS – 20 50 கோடிகள், கர்நாடகா – 22 கோடிகள், ரெஸ்ட் ஆஃப் இந்தியா – 9.75 கோடிகள், ஓவர்சேஸ் – 114 கோடிகள், மொத்தம் 374 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் மிகப்பெரிய ஒரு தொகையை அள்ளிய பிறகு தான் விக்ரம் திரைப்படம் OTT தளம் பக்கம் திசை திரும்பும் என கூறப்படுகிறது.