இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனுடன் கைகோர்த்து உருவாக்கிய திரைப்படம் விக்ரம் இந்த படம் வழக்கம்போல..
போதைப்பொருள் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் கதைகளம் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்களுக்கு ரொம்ப இந்த படம் பிடித்து போய் தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது இதில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றவர்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடித்து மிரட்டி இருந்தனர்.
படம் தொடக்கத்திலிருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து நல்ல வசூல் வேட்டையை கண்டு வருகிறது இது வரை மட்டுமே 270 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மட்டுமே சுமார் 300 கோடியைத் தொட்டுவிடும் என தெரியவருகிறது.
இதை தாண்டியும் கூட விக்ரம் திரைப்படம் வசூலை குவிக்கும் என கணிக்கப்படுகிறது நிச்சயமாக பாகுபலி, KGF படங்களுக்கு நிகராக இந்த படம் நிற்கும் என்பது படத்தைப் பார்த்த மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் கணிப்பாக இருக்கிறது. விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை கண்டு வருகிறது.
குறிப்பாக தெலுங்கு மற்றும் கேரளாவில் ஜோராக வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் தெலுங்கில் விக்ரம் திரைப்படம் எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இதுவரை தெலுங்கில் மட்டும் சுமார் 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் இருக்கிறதாம்.