அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது அந்த வகையில் புஷ்பா, கேஜிஎப் 2, RRR போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் புதிய சாதனை படைத்தது.
தொடர்ந்து தெலுங்கு,கன்னடம் போன்ற பிறமொழி படங்கள் வசூல் அள்ளியது. இதனால் தமிழ் சினிமாவை கிண்டலும் கேலியும் செய்தனர். ஆனால் இந்த நிலையில் தான் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஒரு வழியாக கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியானது இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது.
இது தற்போது மக்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்துள்ளது இதனால் தொடர்ந்து விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சொல்லப்போனால் கேஜிஎப் 2, புஷ்பா போன்ற படங்களுக்கு நிகராக விக்ரம் படமும் வசூலை அள்ளும் என படத்தைப் பார்த்த பலரும் சொல்லி வருகின்றனர்.
விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், பகத் பாசில் போன்றவர் பின்னி பெடலெடுத்து அசத்தியுள்ளனர் இது படத்தின் வெற்றியை வலுவாக நிற்கிறது. இப்போது இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் மூன்று நாள் முடிவில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்வையில் உலகம் முழுவதும் விக்ரம் படம் சுமார் 150 கோடி அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. வருகின்ற நாட்களில் எந்த ஒரு டாப் ஹீரோ படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் நிச்சயம் பிரம்மாண்டமான வசூலை விக்ரம் படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.