நான்கு வருடங்கள் கழித்து உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் நடித்தார். மேலும் கமல் தானே முன்வந்து விக்ரம் படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் சூப்பராக ஓடி அசத்தியது.
மேலும் படத்தின் கதைப்படி ஒவ்வொரு நடிகர்களும் அற்புதமாக நடித்திருந்தனர். அந்த வகையில் விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, அர்ஜுன் தாஸ், ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர்.
விக்ரம் திரைப்படம் தற்போது வரை சுமார் 420 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இந்த நிலையில் தமிழகத்தை தாண்டிலும் மற்ற இடங்களிலும் விக்ரம் படம் வசூலில் அடித்து நொறுக்கியது குறிப்பாக கேரளாவில் பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்றுள்ளன.
ஆனால் அந்த திரை படங்கள் பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தியது கிடையாது ஆனால் கமலின் விக்ரம் திரைப்படம் கேரளாவில் நல்ல வசூல் நடத்தியத்தோடு மட்டுமல்லாமல் இதுவரை சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாம். கேரளாவில் இதுவரை விஜயின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில அதை முறியடித்து தற்பொழுது கமல் கோட்டையாக கேரளா மாறி உள்ளது.