நிக்காத வசூல்.. கெத்து காட்டும் விக்ரம் திரைப்படம் – இதுவரை அள்ளியுள்ள மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

kamal
kamal

சமீபத்தில் தமிழில் வெளிவந்த பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களைவிட மற்ற மொழி படங்களான கே ஜி எஃப் 2, RRR, புஷ்பா போன்ற படங்களே தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. தமிழ்நாட்டில் கூட இந்த படங்களை காணவே ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது.

இப்படி இருந்து வந்த நிலையில் தமிழ் படங்களை  இதைப் போல் மற்ற மொழிகளிலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட மாட்டார்களா என சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதனை பூர்த்தி செய்யும் வகையில் அண்மையில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பான் இந்திய அளவில் உருவாகி இருந்தது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகின்றது.  இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்னும் பிரம்மாண்ட ஒரு படத்தை எடுத்து அசத்தியுள்ளார் தற்போது உலகமெங்கும் விக்ரம் படத்தை பற்றி தான் பேச்சு..

அந்த அளவிற்கு விக்ரம் படத்தில் கமல் நடித்து மிரட்டியுள்ளார் மேலும் கமலுக்கு இணையாக படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் நரேன் சூர்யா போன்ற பல நடிகர்களும் அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிப்பில் பின்னி பெடல் எடுத்ததால் படம் வேற லெவலில் வசூலை அள்ளி வருகிறது

இந்த நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் விக்ரம்படம் 380 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக விக்ரம் மாறியுள்ளது.