விஜய் பட சாதனையை முறியடித்து முன்னேறிய “விக்ரம் திரைப்படம்” – தொட முடியாத உச்சத்தில் கமல்.!

kamal-
kamal-

தமிழ் சினிமா உலகில் அண்மை காலமாக பல்வேறு டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இருப்பினும் பெரிய அளவிலான வசூலை அள்ள தவறியது. இது தமிழ் சினிமா ரசிகர்களை கவலையடையச் செய்தது.

இந்த நிலையில்தான் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை உருவாக்கினார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் கொண்டாட வைத்தது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமல் தொடங்கி பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன், ஏஜென்ட் டினா என பலர் நடித்து அசத்தியது இந்தப் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. தற்பொழுது வரை விக்ரம் திரைப்படம் சுமார் 370 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 400 கோடி கிளப்பில் இணைந்து விடும் என கூறப்படுகிறது.

விக்ரம் படத்தின் வசூல் குறையாமல் இருக்க காரணம் தமிழ்நாட்டையும் தாண்டி கேரளா ஆந்திரா கர்நாடகா பகுதிகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக  பாகுபலி இருந்தது தற்போது அதை முறியடித்து அசத்தியுள்ளது விக்ரம் திரைப்படம்.

மேலும் இன்னொரு சாதனையையும் முறையடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் அதிகம் ஷேர் எடுத்த திரைப்படமாக இருந்தது அந்த சாதனையையும் தற்போது முறையடித்து அதிகம் ஷேர் எடுத்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் மாறி முதலிடத்தில் பிடித்துள்ளது.