விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் மலையாள முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற லெஜன்ட் டீனா.!

kamal-and-agent-deena
kamal-and-agent-deena

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். பொதுவாக நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசியலில் ஆர்வம் வந்ததால் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

தற்பொழுது மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்ட விக்ரம் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் நடித்து அசத்தியிருந்தார்கள்.

இத்திரைப்படம் வெளியாகி பல கோடி வசூல் செய்த மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கு கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒருவர் தான் வசந்தி இவர் விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளார்.

வேலைக்காரி வள்ளியமையாக இருந்து வரும் இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு ஏஜென்ட் டீனாவாக மாறி சண்டைக்காட்சியில் ஈடுபட்டு தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர்.ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது மேலும் அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். இவர் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பே பல திரைப்படங்களில் குரூப் டான்ஸில் ஒருவராக நடனமாடி உள்ளார்.

என்னதான் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தாலும் விக்ரம் திரைப்படம் தான் உலகிற்கு இவரை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. இவ்வாறு விக்ரம் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ள இவர் அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இத்படத்தினை பி.உன்னிகிருஷ்ணன் அவர்கள் இயக்க உள்ளார்கள்.