இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா உலகில் விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களை கொடுத்து இருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கம் அடுத்தடுத்த புதிய படங்களையும் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லோகேஷ் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்தார் அந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 410 கோடியின் மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கமலுடன் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக லோகேஷ் விஜயை டார்கெட் செய்துள்ளார்.
தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இதற்கான கதை ரெடி செய்து வருகிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறாராம் மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மொத்தம் 5 வில்லன்கள் நடித்து வருகின்றனர்.
அதில் ஒருவராக நடிகர் அர்ஜுன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மீதி இருக்கின்ற வில்லன் கதாபாத்திரங்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சிம்பு ஆகியவர்கள் பெயர்கள் இடம் பெறுகின்றன பொருத்திருந்து பார்க்கலாம்.. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய பிரபலத்தை இழுத்து போட்டு இருக்கிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமலின் விக்ரம் படத்தில் நடித்த ஏஜெண்ட் டினா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி. தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை லோகேஷ் அல்லது படக்குழு அறிவிக்கும் என கூறப்படுகிறது.