ஒரு காலத்தில் தமிழ் சினிமாவுலகில் ராசியில்லாத நடிகர் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட நடிகர் தான் விக்ரம் இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே போனதால் இவரை பலரும் ராசியில்லாத நடிகர் என கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள் இருப்பினும் தனது விடாமுயற்சியினால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு சேது திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டது.
பல ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்த இவருக்கு சேது திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி கொண்டே போனது இவர் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இவரைப் பற்றி தற்பொழுதும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் கடந்த 1995ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம்தான் பம்பாய் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க மணிரத்னம் முதலில் விக்ரமை தான் அணுகினாராம்.
ஆனால் அப்பொழுது விக்ரம் புதியமன்னர்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் ஆனால் விக்ரம் புதியமன்னர்கள் படத்தில் தாடி வளர்த்து வந்தார் பம்பாய் திரைப்படத்திற்கு தாடியை இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதால் விக்ரம் தாடியை இழக்க மறுத்து பம்பாய் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனால் பம்பாய் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டது என்று தான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தில் மட்டும் விக்ரம் ஒழுங்காக நடித்திருந்தால் இவருக்கு அப்பொழுதே பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களைப் பற்றி பல கேள்விகளை கேட்டு கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.