சினிமா உலகில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறுவதற்காக தனது உடலையும் வருந்தி கொண்டு நடிப்பது விக்ரமின் ஸ்டைல் அதை பல்வேறு படங்களில் செய்தும் காட்டி இருக்கிறார். அந்த வகையில் சேது இப்பதான் மகான், ஐ, அந்நியன் போன்ற பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது கூட அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்திலும் கூட பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார் இந்த படத்தின் டிரைலர், போஸ்டர், பாடல் என அனைத்தும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த நிலையில் இன்று படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து ரசிகர்கள் மக்களும் படத்தை பார்த்து நல்ல கமெண்ட்களை கொடுத்து வருவதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது வருகின்ற நாட்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வசூல் இறுதியாக புதிய சாதனை படைக்கும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் குறித்த செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
கோப்ரா படத்தின் பிரமோஷனுக்காக இந்த படத்தில் 3 நடிகைகளும் வந்திருந்தனர். அப்பொழுது விக்ரம் குறித்து பேசினர். அதில் அவர்கள் சொன்னது படபிடிப்பு சமயத்தில் விக்ரம் சுட்டித்தனமாக செய்யும் அட்ராசிட்டி மோசம் என்றும் இரவு ஷூட்டிங்கில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்புவார்.
மேலும் தூங்கும் போது வீடியோ எடுத்து காட்டுவார் என்றும் திடீரென உணவு தட்டுடன் சாப்பிட கூறி செல்லமாக டார்ச்சர் செய்வார எனவும் சொல்லினார். அதே சமயம் நடிகர் விக்ரம் சக நடிகர் மீது பண்பு உள்ளவர் என பாராட்டியும் தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்த இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.