தமிழ் சினிமாவை அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் தான் கட்டி ஆடுகின்றனர். அந்த வகையில் ஹச். வினோத், நெல்சன், லோகேஷ் போன்றவர்கள் இடம் பிடிக்கிறனர். குறிப்பாக லோகேஷ் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தொடர்ந்து அசத்தி வருகிறார்.
இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார். அதன்பிறகு தனது கனவு நாயகன் உலக நாயகன் கமலஹாசனுக்கு விக்ரம் படத்தின் கதையை சொல்லி அவரை நடிக்க வைத்தார். மேலும் இந்த திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம்.
இந்தப் படத்தைத் தயாரித்தது படம் ஒரு வழியாக கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் கதை பழசாக இருந்தாலும் கதைக்களம் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி.
மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்த அசத்தியுள்ளனர். அதன் காரணமாக தொடர்ந்து இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது அதன் விளைவாக விக்ரம் திரைப்படம் அதிக வசூலை அள்ளிக் கொட்டுகிறது கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு பெரிய வசூல் ஆகவில்லை என பேசப்படுகிறது.
தற்போது விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடியை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது இன்னும் இந்த படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதால் நிச்சயம் மிகப்பெரிய வசூலை அள்ளித்தான் நிற்கும் என கூறப்படுகிறது.